ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நண்பர்கள் தின வாழ்த்து: மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஆகஸ்ட் 2021, 11:58 am

DIN

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், பிரண்ட்ஸ் சீரிஸின் தீம் பாடல் ஒலிக்க தொழிலதிபர்களுடன் மோடி எடுத்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டு நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிக்கும் விதமாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியா நான்கு பேரால் மட்டுமே ஆளப்படுகிறது என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அதேபோல், பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, மூன்று வேளாண் திருத்த சட்டங்களை விமர்சிக்கும் விதமாக, "தற்போது, நாடு நான்கு பேரால் ஆளப்படுகிறது. அது யார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்,

1990களில் வெளியாகி ஹிட் அடித்த அமெரிக்க சீரிஸ்களில் ஒன்று பிரண்ட்ஸ். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.