மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: ராகுலின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி நோட்டீஸ்

தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி்யுள்ளது.

News image
தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: ராகுலின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி நோட்டீஸ்
Updated On :28 ஜனவரி 2024, 3:50 am

DIN

தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி்யுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் அவரது பெற்றோரின் அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

மேலும் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றைத் தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்" என பதிவிட்டு சிறுமியின் பெற்றோருடன் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Story image

இந்நிலையில் இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியது போக்சோ சட்டப்படி விதிமீறல் எனத் தெரிவித்துள்ள ஆணையம் உடனடியாக அந்தப் புகைப்படத்தை நீக்கக் கோரியுள்ளது. 

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 3 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கவும் டிவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.