எதிர்க்கட்சிகள் அமளி: 15வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
15வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
15வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் முதல் நாளான இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், 15வது நாளாக மக்களவை முடங்கியது. மேலும், நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளிக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com