தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு கொலை மிரட்டல்: பாஜக பிரமுகர் கைது

தில்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2021, 6:58 am

DIN

தில்லி ஜந்தர் மந்தரில் வன்முறையை தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பியதற்காக பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை ஏற்பாடு செய்த அஸ்வினி உபாத்யாய் உள்பட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரிடம் நேற்று இரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.

போராட்டத்தின்போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

'ராம், ராம்' என முழக்கம் எழுப்புபவர்கள் இஸ்லாமியர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியாவில் இருக்க வேண்டுமானால் ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க வேண்டும் என அவர்கள் கூறுவது வுிடியோவில் பதிவாகயுள்ளது.

தில்லி பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ள அஸ்வினி உபாத்யாய் திங்கள்கிழமை வரை கைது செய்யப்படவில்லை. முன்னதாக, கரோனாவை காரணம்காட்டி போராட்டம் மேற்கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.