ஒலிம்பிக்: ஜப்பான் பிரதமருக்கு ஜோ பைடன் வாழ்த்து
By ANI | Published On : 10th August 2021 09:03 AM | Last Updated : 10th August 2021 09:03 AM | அ+அ அ- |

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,
“ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியின்போது பொது சுகாதாரத்தை சிறப்பாக கையாண்ட ஜப்பானில், பாரா ஒலிம்பிக் போட்டியை நடத்த தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக பைடன் உறுதியளித்துள்ளார்.”
கரோனா காரணமாக இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்களின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றன. இதில் 200 நாடுகளை சேர்ந்த 11,000 வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், அதிகபட்சமாக அமெரிக்கா 113 பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.