ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

காஷ்மீர் : பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர்  சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

News image

காஷ்மீர் : 2காஷ்மீர் : பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்  தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On :12 ஆகஸ்ட் 2021, 10:15 am

DIN

சமீப காலமாக காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருவதை தடுக்கும் விதமாக பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர்  சேர்ந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் தீவிரவாதிகள் சிக்கிக்கொள்வதும் பின் தாக்குதலில் கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

நேற்று (புதன்கிழமை) காலை பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

இந்நிலையில் இன்று காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த வீரர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 

நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.