
நாட்டில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 56 கோடிக்கும் அதிகமானோருக்கு (56,00,94,581) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 1,298 பேருக்கு கரோனா
இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 49.48 லட்சத்திற்கும் அதிகமான (49,48,965) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
18-44 வயது பிரிவில் இதுவரை 27,45,272 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,33,586 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.
இதையும் படிக்க | 6 கோடி தடுப்பூசிகள் செலுத்திய முதல் மாநிலமானது உத்தரப்பிரதேசம்
நாட்டில் இதுவரை மொத்தம் 4,35,253,213 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 12,48,41,368 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 1,13,12,852 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 9,23,241 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.