
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களைத் திரும்ப அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 120 இந்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காபூலிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியா வந்தடைந்தனர்.
தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் பாதுகாப்பு விவகாரங்களிலும் மற்ற நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாடு திரும்பிய ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ருத்ரேந்திர டாண்டன் சூழல் குறித்து விவரிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.