
உத்தரகண்டில் ஓட்டுநனரின் சாதூர்யத்தால் 14 பேருடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து தப்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான உத்தரகண்டின் நைனிடாலில் 14 பயணிகளுடன் பேருந்து ஒன்று நேற்று மலைப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையில் பெரிய பாறைகள் உருண்டோடின.
இதனைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டார். ஆனால் நிலச்சரிவை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகளில் சிலர் பேருந்தின் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், வாசல் வழியே வெளியேறியும் தப்பியோடினர்.
இதையும் படிக்க- நேர கட்டுப்பாட்டை திரும்பபெற்ற அரசு: தில்லியில் கரோனா தளர்வுகள் அறிவிப்பு
இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கி மேலும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினார். பேருந்து ஓட்டுநனரின் இந்த சாதூர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பான விடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.