ஆப்கன் விவகாரம்: நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற கட்சிகளுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களுடன் ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com