காபூலிலிருந்து மேலும் 24 இந்தியர்கள் வருகை
ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தைச் சேர்ந்த 11 பேர் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானிலுள்ள சொந்த குடிமக்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இந்தியாவும் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து இன்று மேலும் 180 போ் வருகை
இந்த வரிசையில் தற்போது 24 இந்தியர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 35 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் தில்லி வந்துகொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேலும் 180 பேர் வரை வியாழக்கிழமை இந்தியா அழைத்து வரப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...