மத்திய அரசு விற்பனையில் மும்முரம்: கரோனாவிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்- மக்களுக்கு ராகுல் அறிவுரை

மத்திய அரசு இந்தியாவை விற்பதில் மும்முரமாக இருப்பதால் கரோனாவிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு இந்தியாவை விற்பதில் மும்முரமாக இருப்பதால் கரோனாவிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளைத் தனியாருக்கு குத்தகைக்கு அளிப்பதன் மூலம் ரூ. 6 லட்சம் கோடியைத் திரட்டும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமரிசித்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு நாட்டின் சொத்துகளை விற்றுவருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கரோனாவின் அடுத்த அலையின் தீவிர விளைவுகளைத் தவிர்க்க தடுப்பூசி இயக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். 

ஆனால், மத்திய அரசோ விற்பனையில் மும்முரமாக இருப்பதால், மக்களாகிய நீங்கள் தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com