ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை: குடியரசுத் தலைவர்

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை: குடியரசுத் தலைவர்


ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி சென்றுள்ள குடியரசுத் தலைவர் அங்கு ராமாயண கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார்.

அந்த நிகழ்ச்சியில், "கலாசார மற்றும் ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது. ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடும் கிடையாது, தண்டனைச் சட்டமும் கிடையாது. ராமர் இருக்கும் இடத்தில்தான் அயோத்தி இருக்கிறது. ராமர் இந்த நகரத்தில் நிரந்தரமாக வசிக்கிறார். எனவேதான், இந்த இடம் உண்மையில் அயோத்தி" என குடியரசுத் தலைவர் பேசினார்.

இதன்பிறகு ட்விட்டர் பக்கத்திலும் ராமாயணம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர்கள் கேசவ பிரசாத் மௌர்யா மற்றும் தினேஷ் சர்மா மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com