இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 97.53 சதவீதம் பேர் குணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,275 பேர் கரோனாவிலிருந்து மீண்டு இருப்பதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  97.53 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21.63 கோடியாக உயர்வு
உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21.63 கோடியாக உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,275 பேர் கரோனாவிலிருந்து மீண்டு இருப்பதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை  97.53 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தீவிரமான சிகிச்சைகளும் கட்டுப்பாடு நெறிமுறைகளும் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 30,941 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 350 ஆகவும் பதிவான நிலையில் நேற்று )ஆக-30) சிகிச்சையில் இருந்த 36,275 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,27,65,880 பேரில் 3,19,59,680 பேர் நோயில் இருந்து மீண்டனர் .

இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக குணமானவர்களின் சதவீதமும் 97.53 ஆக  அதிகரித்திருக்கிறது

மேலும் கடந்த வருடத்திலிருந்து நேற்று (ஆக-30 ) வரை கரோனாவால் 4,38,560 பேர் இறந்திருப்பதாகவும் தற்போது 3,70,640 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த் தொற்றுகளை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 64.5 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com