விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2021, 12:49 pm

ஒமைக்ரான் கரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பிருந்த கரோனாவை விட இதன் தீவிர தன்மை அதிகமாக இருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், "தடுப்பூசியின் 2 வது தவணை அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஐரோப்பா பிராந்தியத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, உலகளாவிய கரோனா பாதிப்பில் 70 சதவிகிதம் இப்பகுதியில் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன. வெளிநாட்டை சேர்ந்த அவர்கள், கடந்த நவம்பர் 11 மற்றும் 20 தேதிகளில், பெங்களூருவுக்கு வந்துள்ளனர்.

10 பயணிகளின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. டிசம்பர் 1ஆம் தேதி காலை 8 மணி முதல், 7976 பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட யாரும் தீவிரமாக பாதிக்கப்படவில்லை. இதுவரை, 29 நாடுகளில் 373 பேருக்கு ஒமைக்ரான் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நிலைமையை தொடர்ந்து கண்காணித்துவருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயது 66. இவர் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருக்கிறார்.  மற்றொருவரின் வயது 46. இவர், சுகாதார பணியாளராக பணியாற்றிவருகிறார்.

அவர்களின் தனியுரிமையை பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படாது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அனைவரும் கண்டுபிடிக்குப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒமைக்ரான் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால், விழிப்புணர்வாக இருப்பது முக்கியம். கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி, கூட்டம் கூட்டப்படுதவை தவிர்க்க வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.