காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் ஜோடிக்கு திருமணம்

காதலைக் கொண்டாடாத இலக்கியமோ, சினிமாக்களோ இல்லை. வாழ்வில் பலரும் தங்களது காதலை மனதுக்குள் வளர்த்து காதல் தம்பதிகளாக மாறி வாழ்வையே காதலுக்கான கொண்டாட்டமாக மாற்றுவார்கள்.
காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து காதல் ஜோடிக்கு திருமணம்
காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து காதல் ஜோடிக்கு திருமணம்


காதலைக் கொண்டாடாத இலக்கியமோ, சினிமாக்களோ இல்லை. வாழ்வில் பலரும் தங்களது காதலை மனதுக்குள் வளர்த்து காதல் தம்பதிகளாக மாறி வாழ்வையே காதலுக்கான கொண்டாட்டமாக மாற்றுவார்கள்.

இங்கே கர்நாடக மாநிலத்தில் நாம் தெரிந்துகொள்ளப்போகும் காதல் ஜோடியின் கதை, காலத்தை தாண்டி காதல்பேசுவதாக உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயம்மா - சிக்கன்னா. இருவரும் தங்களது இளமைப்பருவத்தில் ஒருவரையொருவர் காதலித்துள்ளனர். வழக்கம்போல இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்

சிக்கன்னா கூலித் தொழிலாளியாக இருந்ததால், தங்களது மகளை அவருக்குக் கொடுக்க ஜெயம்மாவின் பெற்றோர் மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களது விருப்பப்படி வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்து ஜெயம்மாவுக்கு மணமுடித்தும் வைத்தனர். எப்போதும் போல, தனது காதலை மனதுக்குள்ளேயே சமாதிகட்டிவிட்டு, ஜெயம்மாளும் கணவருடன் அதேப் பகுதியில் வசித்து வந்தார்.

காதல் தோல்வியால் மன உளைச்சல் அடைந்த சிக்கன்னா, அங்கிருந்து வெளியேறி, மைசூரு சென்று தனது வேலையைத் தொடர்ந்தார். ஆனால், ஜெயம்மாவுக்கு இடமளித்த இதயத்தில் வேறொருவருக்கு இடமளிக்க முடியாது என்பதால் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார்.

அதன்பிறகு இருவரது வாழ்க்கையும் வேறு வேறு திசையில் பயணித்தது. ஆனால், ஜெயம்மாவின் நலம் பற்றி அடிக்கடி தனது உறவினர்கள் மூலம் சிக்கன்னா விசாரித்துக் கொண்டே இருந்தார். காலம் உருண்டோடியது. ஜெயம்மாவின் கணவர், அவரைப் பிரிந்து சென்றுவிட, ஜெயம்மாவோ, தனது மகனுடன் மைசூரு வந்தடைந்தார். இந்த நிலையில்தான், இளமையில் காதலர்களாகப் பிரிந்த இருவரும் ஓரிடத்தில் தற்செயலாக சந்திக்க நேரிட்டது.

அப்போதுதான், சிக்கன்னா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தது ஜெயம்மாவுக்கு தெரிய வந்தது. இருவரும் தங்களது வாழ்க்கையை இணைந்து தொடர விரும்பி, திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தங்களது திருமணம் குறித்து 25 வயதாகும் ஜெயம்மாவின் மகனுக்குத் தெரிவிக்க விரும்பாத தம்பதி, தனது மகனுக்கு திருமணமான பிறகு இதனைத் தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தனர்.

இவர்களது திருமணத்தில், சிக்கன்னாவின் உறவினர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர். மிக எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இது பற்றி சிக்கன்னா கூறுகையில்,ஜெயம்மா எப்போதுமே என் நினைவிலேயே இருந்தார். தற்செயலாக இருவரும் சந்தித்தோம். இறுதி வரை ஒன்றாக வாழ விரும்புகிறோம். குறைந்தபட்சம் கடைசி காலத்திலாவது ஒருவருக்கொருவர் துணையாக வாழ விரும்புகிறோம் என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com