நாகாலாந்து வன்முறை: இணைய சேவை முடக்கம்

நாகாலாந்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 
நாகாலாந்து வன்முறை: இணைய சேவை முடக்கம்

நாகாலாந்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 
நாகாலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பேரும், தொடர்ந்து நடந்த வன்முறையில் 5 பேரும் உயிரிழந்தனர். மக்கள் நடத்திய பதில் தாக்குதலில் வீரர் ஒருவரும் உயிரிழந்தார். 
மேலும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் நாகாலாந்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புப் படையினரின் முகாமை சுற்றி நாகாலாந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ, இது துரதிர்ஷ்டவசமான சம்பவம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். இந்த சம்பவம் தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 
இந்த நிலையில் நாகாலாந்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் மோன் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com