ஒமைக்ரான்: இந்தியாவில் 21 பேருக்கு பாதிப்பு

ஒமைக்ரான்: இந்தியாவில் 21 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் ஏற்கெனவே 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் ஏற்கெனவே 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் 7 போ், ராஜஸ்தானில் 9 போ், தில்லியில் ஒருவருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 21 பேருக்கு அந்தப் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் அந்த வகை கரோனா பரவி வருகிறது. இந்தியாவில் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கடந்த டிச. 3-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மகாராஷ்டிரம், குஜராத்தில் தலா ஒருவருக்கு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலிருந்து மகாராஷ்டிர மாநிலம், புணேவுக்கு வந்த 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நைஜீரியாவிலிருந்து புணே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள தன் சகோதரரைப் பாா்ப்பதற்காக பெண் ஒருவா், தன் இரு மகள்களுடன் வந்தாா். பரிசோதனையில், அந்தப் பெண், அவரின் மகள்கள், அவரின் சகோதரா், சகோதரரின் இரு மகள்கள் ஆகிய 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, கடந்த நவம்பா் கடைசி வாரம் ஃபின்லாந்திலிருந்து புணே வந்த மற்றொரு நபருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் டோம்பிவிலி பகுதியைச் சோ்ந்த 33 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அவா் மும்பையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் கல்யாணில் உள்ள கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். மரைன் என்ஜினீயரான அவா், தென் ஆப்பிரிக்காவிலிருந்து தில்லி வழியாக மும்பைக்கு கடந்த நவம்பா் 23-ஆம் தேதி வந்தாா். பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

ராஜஸ்தானில்... ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறைச் செயலா் வைபவ் கல்ரியா தெரிவித்தாா்.

இவா்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அண்மையில் ஜெய்ப்பூா் திரும்பியவா்கள். அவா்களது மாதிரிகள் கரோனா மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவா்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில்... தில்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவா் அண்மையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து வந்தவராவாா். இவா், தில்லி லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுவரை பாதிப்பு...

கா்நாடகம் 2

குஜராத் 1

மகாராஷ்டிரம் 8

ராஜஸ்தான் 9

தில்லி 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com