
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து விஜய் சவுக் வரை செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனர்.
குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணமூல், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.
இதையும் படிக்க | ‘நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது’: ராகுல் காந்தி
இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் வரை கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில் காங்கிரஸின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...