‘நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது’: ராகுல் காந்தி

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கான அடையாளமாகும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
‘நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது’: ராகுல் காந்தி

எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கான அடையாளமாகும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ், திரிணமூல், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.

இதை கண்டித்து இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:

“எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கான அடையாளமாகும். எம்.பி.க்களின் குரலும் நசுக்கப்படுகிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்னைகளை விவாதிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

தொடர் அமளிக்கு மத்தியில் வரிசையாக மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தை நடத்தும் முறையில்லை. பிரதமர் மோடி அவைகளுக்கு வருவதில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்புவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலையாகும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com