‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடி வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்தல், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை பேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத், “தற்காலிகமாகவே விவசாயிகள் வீடு திரும்புவதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

மேலும், “எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. போராட்ட காலத்தில் எங்களுக்காக அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்ற பிறகு மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எங்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது திரும்பப் பெறப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com