மதமாற்ற தடைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கர்நாடகத்தில் போராட்டம்

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று (டிச.22) புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மதமாற்ற தடைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கர்நாடகத்தில் போராட்டம்


மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று (டிச.22) புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஏதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்திற்கு கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (டிச.22) ஒப்புதல் வழங்கப்பட்டது.     

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் இந்த நடவடிக்கையை கண்டித்து கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். 

மேலும், பெங்களூருவின் முக்கிய சாலைகளில் கண்டன பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகவும் சென்றனர். 

இது குறித்து பேசிய கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் பீட்டர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. கட்டாய மத மாற்ற சட்டத்துக்கு எதிராக அரசிடம் முறையிட்டோம். ஆனால் எங்களது பேச்சைக் கேட்க அரசு மறுத்துவிட்டது.

இந்தச் சட்டம் கிறிஸ்தவர்களை மட்டும் பாதிக்காது. பெரும்பான்மையான சமூகத்தினரும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தனியுரிமை, திருமணம், பெண்கள் சுதந்திரம் என அனைத்தின் மீதும் இச்சட்டம் கேள்வி எழுப்புகிறது.

கட்டாய மத மாற்ற சட்டத்துக்கு எதிராக 40 மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. இதன் முன்பு எனது சமூகம் சிறுபான்மைதான். என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com