கேரளத்தில் புதிதாக 29 பேருக்கு ஒமைக்ரான்

கேரளத்தில் மேலும் 29 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் மேலும் 29 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருப்பதாவது:

"புதிதாக ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் எர்ணாகுளம் வந்தவர்கள். மேலும், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் உறுதி செய்யப்பட்டவர்களில் 28 மற்றும் 24 வயதுடைய இருவர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். 35 வயதுடைய ஒருவர் அல்பேனியாவிலிருந்து திரும்பியவர். மற்றொருவர் நைஜீரியாவிலிருந்து வந்தவர்.

கோழிக்கோட்டில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து வந்துள்ளார்.

இதன்மூலம், கேரளத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் இருவருக்கு தொடர்பிலிருந்ததன் மூலம் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எர்ணாகுளத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவர்கள் டிசம்பர் 15, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இங்கு வந்துள்ளனர். நைஜீரியாவிலிருந்து வந்தவர் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர். இவர் டிசம்பர் 14-ம் தேதி வந்துள்ளார். 4 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருந்த பிறகு அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் உறுதி செய்யப்பட்டவர் டிசம்பர் 19-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கேரளம் திரும்பியுள்ளார்.

ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது."

கேரளத்தில் முதன்முறையாக பிரிட்டனிலிருந்து திரும்பிய ஒருவருக்கு கடந்த 12-ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com