விவசாயிகளை பயங்கரவாதிகள் என்பது மிகப்பெரிய குற்றம்: பிரியங்கா

விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றழைப்பது மிகப்பெரிய குற்றம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பிரியங்கா காந்தி
விவசாயியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பிரியங்கா காந்தி


விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றழைப்பது மிகப்பெரிய குற்றம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயியின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதது, விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் குற்றம்.

அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றழைப்பதும், அவர்களது போராட்டத்தை அரசியல் சதி செய்வதும் மிகப் பெரிய குற்றம்.

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை. இது நமது விவசாயிகளின் வலி மற்று வேதனை மட்டுமே என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com