

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பிற்காக சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதனிடையே விபத்துக்குள்ளான தமது காரின் கண்ணாடியை பிரியங்கா காந்தியே சரிசெய்து துடைத்தார்.
தில்லியில் டிராக்டர் பேரணியின்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தை சந்திப்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூருக்கு பிரியங்கா காந்தி சென்றார்.
அப்போது பாதுகாப்பிற்காக சென்ற வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதனிடையே விபத்தில் கார் கண்ணாடி முழுவதும் தூசி நிரம்பி ஓட்டுநருக்கு சாலை தெரியாத நிலை ஏற்பட்டது. அப்போது தமது கார் கண்ணாடியை பிரியங்கா காந்தி துடைத்து ஓட்டுநருக்கு உதவி செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.