
ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்ஜின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.
இதுதொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் ஹஞ்சின் ராஜ்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காஷி வீர மரணம் அடைந்துள்ளார். 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஜம்முவில் உள்ள கோவில்களில் குண்டு வைக்க இருந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.