பெரிய மனதுடன் இதைச் செய்யுங்கள்: அஜித் பவார் வேண்டுகோள்

பெரிய மனதுடன், பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரிய மனதுடன் இதைச் செய்யுங்கள்: அஜித் பவார் வேண்டுகோள்
பெரிய மனதுடன் இதைச் செய்யுங்கள்: அஜித் பவார் வேண்டுகோள்


புணே: பெரிய மனதுடன், பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரியைக் குறைத்து ஏழை, எளிய மக்களின் நிதிச் சுமையை குறைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நிதித் துறை அமைச்சராக இருக்கும் அஜித் பவார், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான மாநில வரியை உயர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியத் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், இவ்வாறு கூறினார்.

மாநில அரசு வரிக்கு வரி விதிப்பதாலேயே, பெட்ரோல், விலை ரூ.105க்கு விற்கப்படுவதாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருப்பது சுத்தப் பொய் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த நிதிநிலை அறிக்கையிலும் கூட எந்த வரியையும் மாநில அரசு உயர்த்தவில்லை. தற்போது இங்கே விதிக்கப்படும் வரி அனைத்தும் மத்திய அரசு விதித்திருப்பதே. வரிகள் மூலம் வரும் வருவாயின் பெரும் பகுதியை மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது, எனவே, பெரிய மனது வைத்து, மத்திய அரசுதான் வரியைக் குறைக்க வேண்டுமே தவிர, எங்களது கைகளில் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார்.

68 நாள்களில் 38வது முறை: பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு

நாட்டில் தமிழகம் உள்பட ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மே 4ஆம் தேதியிலிருந்து கடந்த 68 நாள்களில் 38வது முறையாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. மேலும் செய்தியைப் படிக்க..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com