68 நாள்களில் 38வது முறை: பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு

நாட்டில் தமிழகம் உள்பட ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மே 4ஆம் தேதியிலிருந்து கடந்த 68 நாள்களில் 38வது முறையாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.
68 நாள்களில் 38வது முறை: பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு
68 நாள்களில் 38வது முறை: பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு

புது தில்லி: நாட்டில் தமிழகம் உள்பட ஐந்து மாநில பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மே 4ஆம் தேதியிலிருந்து கடந்த 68 நாள்களில் 38வது முறையாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.

இன்று தலைநகர் புது தில்லியில் பெட்ரோல் விலை 35 காசுகள் உயர்ந்து ரூ.100.91க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.88க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.67க்கும், டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, மே 4ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு மாத காலத்தில் பெட்ரோல் விலை ரூ.10.51 காசுகளும், லிட்டர் விலையில் ரூ.9.15 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

புது தில்லி உள்பட இதர மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப விலைகளில் மாற்றங்கள் உள்ளன.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.93க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.97.46க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார், பெரிய மனது வைத்து, பெட்ரோல், டீசல் பொருள்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைத்து, ஏழை, எளிய மக்களின் துயரத்தைப் போக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மிக அதிகமாக, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.24க்கும், டீசல் ரூ.98.67க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com