குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனை தெரிவித்துள்ளார்.
12 முதல் 18 வயதுடைய சிறாகளுக்கான ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
கரோனா மூன்றாவது அலை குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், மூன்றாவது அலையானது முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுவதால், தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி உற்பத்தி பணிகளில் சைடஸ் கேடில்லா நிறுவனம் இறுதிகட்டத்தில் உள்ளது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இம்மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று கரோனாவுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!

தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஆதி கும்பேஸ்வரர் யானை!

பள்ளி, கல்லூரி சம்பவங்கள்: அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு! உதயநிதி
மகளிர் இடஒதுக்கீடு மசோதவை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் வேண்டுகோள்!
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



