காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தில்லியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத்தை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவற்றுக்கு மத்தியில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியும் பங்கேற்றுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர் - 173 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை; இந்திய அணிக்கு தேர்வானது குறித்து சூர்யவன்ஷி!

ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை வைத்திருப்பது குற்றமா?

6/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 6 அணிகள்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46


