ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு
Updated On :30 ஜூலை 2021, 2:33 pm

DIN

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

கர்நாடகத்தின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மாநில அரசியல் நிலை, வளர்ச்சித்திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.