சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

46 மாவட்டங்களில் பரவல் அதிகரிப்பு..மத்திய அரசு எச்சரிக்கை

நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜூலை 2021, 12:00 pm

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும் குறிப்பாக 10 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பு விகிதம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாட்டுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்துவது மட்டுமில்லாமல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி மாநிலங்களிடம் மத்திய அறிவுறுத்தியுள்ளது. கரோனாவால் உயிரிழக்கும் 80 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டோர் என அரசு குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதார்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 10 சதவிகித்திற்கு மேல் உள்ளது. 53 மாவட்டங்களில் 5-10 சதவிகிதமாக உள்ளது. இந்த காலத்தில் கவனக்குறைவாக இருந்தால், மேல் குறிப்பிட்ட மாவட்டங்களில் நிலைமை மோசமாகிவிடும்

கரோனா பாதிப்பு 10 சதவிகித்திற்கு மேல் உள்ள மாவட்டங்களில் மக்களின் நடமாட்டத்தையும் கூட்டத்தையும் தவிர்க்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட 80 சதவிகிதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகங்கள் இவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.