எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நாடாளுமன்றம் முடக்கம்: ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதனால் வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :31 ஜூலை 2021, 3:00 pm

DIN


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதனால் வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

பெகாஸஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே நிலவி வரும் பிரச்னையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குறைந்த பணி நாட்களே செயல்பட்டுள்ளன. பெகாஸஸ் குறித்து விவாதம் நடத்தக்கோரியும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசோ இந்தக் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இதுகுறித்து அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பது:

"தொடர் அமளியால் 54 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மக்களவை 7 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 53 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மாநிலங்களவை 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. ஆக மொத்தம் 107 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய நாடாளுமன்றம் வெறும் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 89 மணி நேர பணி நேரம் வீணாகியுள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.