விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநிலங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி: பிரதமர் மோடி

மாநிலங்களுக்கு இலவசமாகவே கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 ஜூன் 2021, 12:45 pm

DIN

மாநிலங்களுக்கு இலவசமாகவே கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-ம் அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியது:

"மாநில அரசுகள் நாங்களே ஏன் தடுப்பூசியைத் தயாரிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார்கள். மாநில அரசுகளுக்கு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையையே மத்திய அரசு பின்பற்றுகிறது.

அவர்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது கொள்கைகளில் மாற்றம் செய்கிறோம். கடந்த மே முதல் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி கொள்கையில் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை மட்டுமே தடுப்பூசிகளை நாங்கள் விநியோகித்து வந்தோம்.

தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவிகிதப் பங்கையும் மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21 முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாகவே தடுப்பூசி விநியோகிக்கப்படும்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும். மீதமுள்ள 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்" என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.