மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே எலடு என்ற இடத்தில் கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற நபரை, ஆட்டோ ஓட்டுநர் ஜவஹர், விவேகத்துடன் செயல்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
பலாதோல் என்ற இடத்துக்கு அருகே உள்ள எலடு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகள் திரிஷ்யா. பள்ளித் தோழியான திரிஷ்யா, தனது காதலை ஏற்காததால் அவரைக் கொலை செய்ய முடிவெடுத்த வினீஷ் வினோத், யாரும் இல்லாத போது அவரது வீட்டுக்குச் சென்று அவரைக் குத்திக் கொன்றார்.
இதையும் படிக்கலாமே.. போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி
காலை 8.15 மணியளவில் கொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற வினீஷ், பாலாதோல் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஜவகரின் ஆட்டோவைக் கையசைத் நிறுத்தியுள்ளார். வினீஷ் ஆடையில் ரத்தக் கறை இருந்ததைப் பார்த்த ஜவகர் அதுபற்றிக் கேட்டுள்ளார். தான் வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், தனது நண்பர் காயமடைந்துவிட்டதாகவும், அங்கிருந்தால், பொதுமக்கள் வேகமாக வந்ததாகக் கூறி என்னை அடிப்பார் என்று நினைத்து அங்கிருந்து தப்பியோடி வந்ததாகவும், தன்னை வேகமாக இங்கிருந்து அழைத்துச் செல்லுமாறும் கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட ஜவகர், உடனடியாக அங்கிருக்கும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்ட வினீஷ், அங்கு வெளியே விட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டதோடு, வீடு திரும்பிச் செல்லவும்தான் பணமளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே.. சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் எது?
இந்த நிலையில், எலடு பகுதியில் நடந்த கொலைச் சம்பவம் குறித்து ஜவகருக்கு அவரது நண்பர் ஒருவர் செல்லிடப்பேசியில் அழைத்து தகவல் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஓரளவுக்கு சூழ்நிலையைப் புரிந்து கொண்ட ஜவகர், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், கொலையாளியையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டே ஆட்டோவை இயக்கினார்.
தன் மீது சந்தேகம் வராதவகையில், கொலையாளியிடம், வாகனத்துக்கு காப்பீடு இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு, வினீஷின் கவனத்தை திசைதிருப்பியுள்ளார்.
அதாவது, ஆட்டோவை தான் நிறுத்தியதும் வினீஷ் தப்பியோடாமல் தடுக்கும் ஒரு நபர் அங்கிருக்க வேண்டும் என்று திட்டமிட்ட ஜவகர், சுபின் என்ற எனது நண்பர், காவல்நிலையத்துக்கு அருகே நின்றி கொண்டிருப்பதைப் பார்த்ததும், எனது ஆட்டோவை அவருக்கு அருகே நிறுத்தி, வினீஷை பிடிக்குமாறு கத்தினேன்.
இதையும் படிக்கலாமே.. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்புத் தொகை ரூ.20,706 கோடி
உடனடியாக எனது நண்பரும், வினீஷை தப்பவிடாமல் பிடித்துக் கொண்டார். உடனடியாக அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம். காவல்துறையினர் வினீஷை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளத்தில் இதுபோன்று காதலை ஏற்காத பெண்களை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 7 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 10க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.