நாட்டில் 63.5% மக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்புத் திறன்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55.7 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.
நாட்டில் 63.5% மக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்புத் திறன்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்
நாட்டில் 63.5% மக்களுக்கு கரோனா நோய் எதிர்ப்புத் திறன்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்


புது தில்லி: உலக சுகாதார நிறுவனமும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கரோனா செரோ ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 55.7 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாக எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார்.

இது குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறுகையில், கரோனா செரோ பரிசோதனையில் 18 வயதுக்கு உள்பட்டவர்களில் 55.7 சதவீதம் பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 63.5 சதவீதம் பேருக்கும் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.

இந்த செரோ ஆய்வினை, மிகப்பெரிய எண்ணிக்கையில் நடத்தினால், மிக முக்கியத்துவம் பெறும் முடிவுகள் கிடைக்கப்பெறும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"இந்த செரோ ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் நேர்மறையாக உள்ளன. அதாவது, இங்கு இது நடந்திருப்பின், நாட்டின் பிற பகுதிகளிலும் இது நடந்திருக்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று குலேரியா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த சீரோ கரோனா பரிசோதனையில், குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது என்பதால், குழந்தைகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் ஊரக மற்றும் புறநகர்களில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளில், சில பகுதிகளில் 50 சதவீத குழந்தைகளுக்கும் ஒரு சில பகுதிகளில் 80 சதவீத குழந்தைகளுக்கும் ஆன்டிபாடி எனப்படும் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, அவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு, நோய் எதிர்ப்பாற்றல் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி

இந்தப் பரிசோதனையின் மூலம், எண்ணற்ற குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பரிசோதனையின் மூலம் இரண்டு விஷயங்கள் தெரிய வந்துள்ளது. 

ஒன்று, அதிகளவிலான குழந்தைகளுக்கு கரோனா பாதிப்புத்து, லேசான பாதிப்புகள் ஏற்பட்டு, பிறகு அதிலிருந்து குணமடைந்துள்ளனர். இரண்டாவது, நாட்டில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு ஏற்கனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, மீண்டும் அவர்களுக்கு கரோனா தாக்கும் அபாயம் குறைவுதான்.  இந்த தரவுகளின் அடிப்படையில் அல்லது உலகம் முழுவதும் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கப் போனால், மூன்றாம் அலையின்போது குழந்தைகளுக்கு அதிகளவில் கரோனா பாதிக்கப்படவோ, குழந்தைகளை கரோனா பாதிப்பு மிக மோசமாகத் தாக்கவோ வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ஒருவருக்கு ஒரு முறை கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அதனை எதிர்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் என்பது நான்கு முதல் 6 மாதங்களுக்கு இருக்கும். அதன்பிறகுதான் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கும். ஆனால், அந்த நபரின் செல்கள், கரோனாவை எதிரக்கும் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் திறனை ஒரு சில ஆண்டுகள் வரைக் கொண்டிருக்கும் என்றும் குலேரியா தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு, கரோனா நோய் எதிர்ப்பு புரதங்கள் கண்டறியும் இரத்த பரிசோதனை நடத்தியதன் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  இந்த பரிசோதனை செய்வதன் மூலம் சாதாரண பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தியின் அளவினை கண்டறிய முடியும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆலோசனைப்படி பொதுமக்களுக்கு கரோனா நோய்க்கான நோய் எதிர்ப்பு புரதங்களான ஆண்டிபாடிகள் எனப்படும் இம்யூனோ குளோபுலின் ஜி எந்த அளவிற்கு பொதுமக்களிடம் உள்ளது என்பதனை கண்டறிய இரத்தத்திலுள்ள சீரத்தை பிரித்து அதில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com