நாட்டில் கரோனா பாதிப்பு விகிதம் 2.12%-ஆக குறைவு

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோ விகிதம் 2.74 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5.52 லட்சமாக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுடன் இணைந்து மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரித்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளாலும் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 52 லட்சத்து 76 ஆயிரத்து 457 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 32.90 லட்சம் (32,90,29,510) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com