நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 907 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,97,637 உயர்ந்துள்ளது.
நாட்டில் சுமார் 102 நாள்களுக்குப் பின் இன்று கரோனா பாதிப்பு முதல் முறையாக 40 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,52,659 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை 2,93,66,601 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.87 சதவீதமாக உள்ளது.
நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 2.12 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 22 நாள்களாக தொடர்ந்து 5 சதவீதத்துக்குள் இரக்கிறது.
நாட்டில் இன்று காலை நிலவரப்படி 32.90 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.