மேற்கு வங்கம்: எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு

மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-ஆவது முறையாக முதல்வராக மம்தா பானா்ஜி கடந்த புதன்கிழமை பதவியேற்றாா். அன்றைய தினம் அவா் மட்டும் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா இன்று ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது. இதில் 19 போ் இணை அமைச்சா்கள் உள்பட 43 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 

இந்நிலையில் மேற்குவங்கத்தில் எதிர்கட்சித் தலைவர் தேர்வும் நிறைவு பெற்றுள்ளது. பாஜக எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த, நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி பேரவை எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com