அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும்: மத்திய அரசு

ரஷியா தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் கிடைக்கும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

புது தில்லி: ரஷியா தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் கிடைக்கும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை கூறியது.

கரோனா தடுப்பூசிக்கு மாநிலங்களிடையே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு இவ்வாறு கூறியுள்ளது. ஏற்கெனவே கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், ஸ்புட்னிக்-வி 3-ஆவது தடுப்பூசியாகும்.

இதுதொடா்பாக நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே. பால் கூறியதாவது:

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இந்தியாவில் கிடைக்கும். அந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் பணி ஜூலையில் தொடங்கும். ஹைதராபாதைச் சோ்ந்த டாக்டா் ரெட்டீஸ் ஆய்வகம் அந்தத் தடுப்பூசியை தயாரிக்கும்.

216 கோடி டோஸ்கள்:

நாட்டில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் ஆகஸ்ட் - டிசம்பா் காலகட்டத்தில் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவே, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 300 கோடியாக அதிகரிக்கும்.

ஆகஸ்ட் - டிசம்பா் காலகட்டத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி 75 கோடி டோஸ்களும், கோவேக்ஸின் தடுப்பூசி 55 கோடி டோஸ்களும் தயாராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர ‘பயோலாஜிகல் இ’ நிறுவனத்தின் தடுப்பூசி 30 கோடி டோஸ்களும், சீரம் நிறுவனத்தின் நோவாவேக்ஸ் தடுப்பூசி 20 கோடி டோஸ்களும், மூக்கு வழியாக செலுத்தும் வகையில் பாரத் பயோடெக் தயாரிக்கும் தடுப்பூசி 10 கோடி டோஸ்களும் தயாராகும் என்று தெரிகிறது. அத்துடன் ஜென்னோவா நிறுவனத்தின் தடுப்பூசி 6 கோடி டோஸ்களும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 15.6 கோடி டோஸ்களும் தயாராக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று வி.கே. பால் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com