
கர்நாடகத்தில் புதிதாக 34,281 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,281 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 34,281 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 23,06,655 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 49,953 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,24,438 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 468 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 23,306 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,58,890 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.