அம்பானி குடும்பம் லண்டனில் குடியேறுகிறதா? - ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளத
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆண்டிலியாவில் உள்ள 400,000 சதுர அடியில் அல்டாமவுண்ட் சாலையில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹாட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். இதையடுத்து அவர் மற்றும் குடும்பத்தினர் 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை. அவை தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற ஊகங்கள் அடிப்படையில் வெளியான செய்திகள் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் "லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை" என்பதை அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், ஸ்டோன் பார்க் பங்களாவை திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளூர் விதிமுறைகளுடன் முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறது." 

அதே நேரத்தில், லண்டனில் வாங்கிய 300 ஏக்கர் நிலம், தங்களது பொழுதுபோக்கு விடுதியை விரிவுப்படுத்தவே என்றும், இது இந்தியாவின் புகழ்பெற்ற பொழுதுபோக்கு துறையின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்தும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com