யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சீக்கியர்களையும், இஸ்லாமியர்களையும் இந்துத்துவவாதிகள் தாக்குவார்கள் - ராகுல் காந்தி

இந்துத்துவவாதிகள் சீக்கியர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்கச் சொல்பவர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

News image
ராகுல்காந்தி
Updated On :12 நவம்பர் 2021, 10:19 am

DIN

இந்துத்துவவாதிகள் சீக்கியர்களையும், இஸ்லாமியர்களையும் தாக்கச் சொல்பவர்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘ஜன் ஜக்ரன் அபியன்’ என்கிற தலைப்பில் தேசிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி வர்தாவில் இன்று நடந்தது.

அப்போது பார்வையாளர்களிடம் கானொலி மூலம் உரையாற்றிய ராகுல் காந்தி ‘இந்து மதத்திற்கும் இந்துத்துவவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேட்ட பின் ‘ இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையென்றால் ஏன் வேறுவேறு பெயர்களை வைத்திருக்கிறார்கள். வித்தியாசம் இருக்கிறது. இந்து மதம் சீக்கியர்களையும் , இஸ்லாமியர்களையும் தாக்குமா? ஆனால் இந்துத்துவவாதிகள் கண்டிப்பாகத் தாக்குவார்கள்’ எனத் தெரிவித்தார்.

மேலும் உரையில் , நம்முடைய சித்தாந்தங்களை பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக கொண்டு செல்லலாததால் தான் அது மறைந்து கிடக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.