பாஜகவின் ஆட்டங்கள் அம்பலமாகிவிட்டன: லாலு பிரசாத் யாதவ் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்

மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஆட்டங்கள் அம்பலமாகிவிட்டன: லாலு பிரசாத் யாதவ் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்


மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் திட்டத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தில்லி சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசுக்கு சவாலாகத் திகழ முடியும் எனப் பார்க்கிறீர்களா?

பதில்: பதில்: இந்த நாடு சர்வாதிகார நடவடிக்கைகளால் நடத்தப்படுவதில்லை. ஜனநாயக நடவடிக்கைகள், அரசியலமைப்பு நடைமுறைகள் மூலமும் நடத்தப்பட வேண்டும். ஆனால், மோடி அரசு ஒற்றை நபர் அரசாக மாறி முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வாதிகாரப் போக்கில்  நாட்டை வழிநடத்தி வருகிறது. வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆக, எதிர்க்கட்சிகள் கைகோர்த்தால்தான் சர்வாதிகார மோடி அரசின் பிடியிலிருந்து நாட்டை மீட்க முடியும்.

கே: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க நீங்கள் ஏதேனும் முன்னெடுப்புகளை எடுத்துள்ளீர்களா?

ப: சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசினேன். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டக்கோரி அவரை வலியுறுத்தினேன். எதேச்சதிகார மோடி அரசுக்கு எதிராக அமைப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் வெளிப்படுத்திய ஒற்றுமையைப் போல எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையை வெளிப்படுத்துவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

கே: பிரதமர் மோடியை எதிர்க்க எதிர்க்கட்சிகளிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான முகம் இல்லாததுபோலத் தெரிகிறது. இந்த நிலையில், 2024-இல் இது எப்படி அவருக்கு சவாலைக் கொடுக்கும்?

ப: மோடி அரசை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் தலைமைப் பற்றாக்குறை ஒன்னும் இல்லை. பாஜகவின் ஆட்டங்கள் மக்களிடம் அம்பலமாகிவிட்டன.

கே: நாடு இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய பிரச்னைகள் என்ன?

ப: பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த இரண்டு மிகப் பெரிய பிரச்னைகளை சரி செய்யதான் மோடி அரசு முற்றிலும் தவறிவிட்டது. தனியார்மயம் ஊக்கப்படுத்தப்படுகிறது. ரயில்வேவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்: அதை அரசு எப்படி சிதைத்துவிட்டது. ஏர் இந்தியாவை விற்றுவிட்டது. மேலும் நாட்டின் சொத்துகளை விற்க திட்டமிட்டு வருகிறது. ஜனநாயகமும், அரசியலமைப்பும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுகின்றனர். வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.

கே: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற அரசின் முடிவு உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க உதவுமா?

ப: பாஜக எந்த இடத்திலும் ஜெயிக்காது. மக்கள் அவர்களது உண்மையான முகத்தை அடையாளம் கண்டுவிட்டனர்.

கே: உத்தரப் பிரதேச தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்துமா? நீங்கள் பிரசாரத்துக்குச் செல்வீர்களா?

ப: உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தாது.சமாஜவாதிக்கு ஆதரவளிக்கும். அங்கு சமாஜவாதி பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுவே ஆட்சியமைக்கும். யோகி அரசுக்கு எதிராகவே காற்று வீசுகிறது. தேவைப்பட்டால் சமாஜவாதி வேட்பாளர்களுக்காக அங்கு பிரசாரம் மேற்கொள்வேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com