
புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 621 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 8,774
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,72,523.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 9,481
இதுவரை குணமடைந்தோர்: 3,39,98,27 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | வாழப்பாடி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.34% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 621. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,68,554.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,05,691. இது கடந்த 543 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.31 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மிகக் குறைவு.
621 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 4,68,554 ஆக உயர்ந்துள்ளது.
வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 0.85% ஆக உள்ளது. இத கடந்த 14 நாட்களில் 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.
தினசரி பாசிடிவிட்டி விகிதம் 0.80% ஆக உள்ளது. இத கடந்த 55 நாள்களாக 2% சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.
இதையும் படிக்க | இந்தியர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குகிறார்கள்: பிரதமர் மோடி
பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.
கரோனா தடுப்பூசி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,21,94,71,134 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 82,86,058 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,94,27,262 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 10,91,236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.