வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் நாடார் தெருவில் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்ட எம்பி
இன்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடைக்கப்பட்ட கோவில் உண்டியல்.
கோவில் உண்டியல் கோவிலுக்கு வெளியே சாலையில் உடைந்த நிலையில் சிதறிக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் வாழப்பாடி போலீஸில் புகார் செய்துள்ளனர். கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக கோவில் உண்டியலில் திறக்கப்படாமல் இருந்ததால், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க தாலி உள்பட ரூ. 2 லட்சம் வரை உண்டியலில் இருந்திருக்குமென, இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.