வாக்களித்தவர்களுக்கு நன்றி; நந்திகிராம் தோல்வி ஒரு சதிவேலை - மம்தா பானர்ஜி உரை

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 
வாக்களித்தவர்களுக்கு நன்றி; நந்திகிராம் தோல்வி ஒரு சதிவேலை - மம்தா பானர்ஜி உரை

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அவர், வாக்கு எண்ணிக்கையின் 21 சுற்றுகள் முடிவில், பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். 

முன்னதாகவே, இன்று காலை முதலே கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடினர். வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் வெளியே வந்த மம்தா பானர்ஜி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது, 'இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. 

இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com