பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி!

பவானிபூர் தொகுதியில் முதல்வரும் திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா பானர்ஜி 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 
பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா வெற்றி!

பவானிபூர் தொகுதியில் முதல்வரும் திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா பானர்ஜி 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பவானிபூர் தொகுதியில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அவர், வாக்கு எண்ணிக்கையின் 21 சுற்றுகள் முடிவில், பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். 

முன்னதாக, 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும் முதல்வராக அவா் பதவியேற்றாா். 

முதல்வராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு செப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

நந்திகிராம் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறிய மம்தா பானர்ஜி, இப்போது பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

மேற்குவங்கத்தில் மேலும் இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் முன்னிலை வகித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com