பெட்ரோல், டீசல் விலை: விமான எரிபொருளைவிட 30% அதிகம்

பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 4-ஆவது நாளாக ஒரு லிட்டருக்கு 35 பைசா வரை அதிகரிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை: விமான எரிபொருளைவிட 30% அதிகம்

பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 4-ஆவது நாளாக ஒரு லிட்டருக்கு 35 பைசா வரை அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டில் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.103.01 ஆகவும், டீசல் ரூ.98.92 ஆகவும் உள்ளது. இதுவே தில்லியில் பெட்ரோல் ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.111.77 ஆகவும் உள்ளது.

ஏற்கெனவே, அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், இப்போது டீசலும் பல்வேறு மாநிலங்களில் ரூ.100-யைக் கடந்து உயா்ந்து வருகிறது.

தில்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டா் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.105.95 ஆகவும் உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com