
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானர்கள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் கடந்த 5 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதையும் படிக்க | உத்தரகண்ட் நிலச்சரிவு: 46 பேர் பலி
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் கனமழையால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கல்கள். நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.